காஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில்ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund) பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை 2024 மே 31 வரைநீடிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்களுக்கு இந்த நிதியத்திற்குப் பங்களிப்புகளைஅளிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 ஏப்ரல் 30ஆம் திகதியுடன்முடிவடைய இருந்தது.
இம்முறை நோன்பு துறக்கும் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரசநிறுவனங்கள் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதியத்திற்கு வழங்கியதோடு இதன்முதற்கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவரகத்தின்ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் பலஸ்தீன அரசாங்கத்திடம்ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கையளித்தார்.
நன்கொடையாளர்களுக்கு 2024 மே 31 வரை தொடர்ந்து பங்களிக்க வாய்ப்புவழங்கப்பட்டுள்ளதோடு பங்களிக்க விரும்பும் நன்கொடையாளர்களாகஇருந்தால், அந்த நன்கொடைகளை ‘இலங்கை வங்கி தப்ரபேன் கிளையில்(747) 7040016’ எனும் வங்கிக் கணக்கில் அன்பளிப்புத் தொகையை வைப்புசெய்ய முடியும். அதன்பின்னர் பற்றுச்சீட்டை 077-9730396 என்ற எண்ணுக்குWhatsApp ஊடாக அனுப்புமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காஸா பகுதியில் வாழும் குழந்தைகளுக்குத் தேவையானநிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அண்மையில் வழங்கியநிதியுதவிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி தொடர்பானமுகவர் அமைப்பின் (UNRWA) ஆணையாளர் நாயகம் பிலிபே லெஸரினி(Philippe Lazzarini), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்தில்தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி தொடர்பான முகவர் அமைப்பினால்முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கு இலங்கையின் பங்களிப்பு ஐக்கியநாடுகளின் நிவாரண மற்றும் பணி தொடர்பான முகவர் அமைப்பின் பராமரிப்பில்உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் அத்தியாவசிய மனிதாபிமானத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும்என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி தொடர்பான முகவர் அமைப்பினால்நடைமுறைப்படுத்தப்படும் நிவாரணத் திட்டங்களுக்கு நிதி வழங்குவதில் உள்ளசிக்கல் நிலை குறித்து மேலும் குறிப்பிட்ட லெஸரினி, அந்தத் திட்டங்களைச்செயற்படுத்துவதில் பங்குதாரர்களின் பங்களிப்பு முக்கியப் பங்காற்றுவதாகவும்குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனிலுள்ள அகதிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும்பணிகள் தொடர்பான முகவர் அமைப்பு ஆகியவற்றிற்கு இலங்கை வழங்கியபங்களிப்புக்கு நன்றி தெரிவித்த லெஸரினி, எதிர்காலத்தில் இலங்கைஅரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வழங்கும் என்றும் நம்பிக்கைதெரிவித்துள்ளார்.