காய்ச்சலால் பீடிக்கப்பட்டவரை பார்க்கப் போன 25 பேருக்குகொரோனா

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊருக்குள் நல்லவர் சுகயீனமுற்று இருந்தராம் பார்க்கப்போனவர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி தென்மராட்சியில் சம்பவம்

நாட்டில் அதிவேகமாக அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசு பல சுகாதார நடைமுறைகளை அமுலாக்கி அவற்றை நடைமுறைப்படுத்த பல சவால்களை சந்தித்து வருகின்றது.

மக்களின் அலட்சியமும், தீண்டாத செயல்களுமே கொரோனாத் தொற்று நாட்டில் வேகமாக அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாகும்.

அந்தவகையில் தென்மராட்சியில் மக்களுக்கு பல சமூகப்பணி செய்துகொண்டிருப்பவரும், வர்த்தகருமான ஒருவர் காய்ச்சல் பீடிக்கப்பட்டுள்ளார். ஊருக்கு நல்லது செய்பவரை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் அவரது நண்பர்கள், அயலவர்கள் என அவரைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

அவருக்கு காய்ச்சல் குறையாத பட்சத்தில் அவருக்கு பீசி.ஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவரை பார்வையிட வந்தவர்கள் என 25 பேர் தற்போது கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article