நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீன்பிடி படகில் இருந்த மீனவர்கள் நால்வரைநேற்றையதினம் (ஜூலை06) கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இல்லாமல் காணாமல்போயுள்ளதாக மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்புமையம் இலங்கையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்புமையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.
அதற்கமைய, கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின் உதவியுடன்முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சிலாபத்திற்கு அப்பால்மேற்கு கடலில் இந்திய மீனவர்களின் மீன்பிடி படகு செயலிழந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அப்படகில் இருந்த 4 இந்திய மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்தோடுதிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, வைத்தியபரிசோதனைகளுக்குப் பிறகு, மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளைபொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.