பாடசாலை மாணவர்களின் நலனை அடிப்படையாக் கொண்ட தரவுகளின்அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர்கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
‘தற்போதைய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானமூலோபாயங்களை வகுத்தல்’ என்ற தலைப்பில் கொழும்பில் டிசம்பர் 11 இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள், பொதுச் சேவை வழங்குநர்கள் என்ற வகையில் பொதுமக்களிடம்மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் இதன்போதுவலியுறுத்தியுள்ளார்.
கல்வி என்பது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். தனிப்பட்ட ரீதியில் மட்டுமன்றி, ஒரு சமூகமாகவும் எழுச்சி பெற வேண்டும். அதற்கான சமூகப் பொறுப்பு உள்ளது என்பதை உணர வேண்டும். அதன் மூலம் அறிவையும் திறமையையும் பெற வேண்டும். கல்வி ஒரு வர்த்தகப் பண்டம் அல்ல. எனினும் கல்வியை ஒரு வர்த்தக பண்டமாகமாற்றியுள்ளனர்.
இந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியதெரிவித்துள்ளார்.