காசாவின் பிரதான வைத்தியசாலையான அல் – ஷிஃபா வைத்தியசாலை தற்போது கல்லறையாக மாறி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் சடலங்கள் குவிந்து கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைமாத குழந்தைகள் மற்றும் 45 சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இதுவரை மூன்று குறைமாத குழந்தைகள் உட்பட பிராணவாயு பற்றாக்குறையால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் கடந்த சில நாட்களாக நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.