கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உகந்தை தொடக்கம் கதிர்காம பாதை யாத்திரிக்கான காட்டுப் பாதை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 20) திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறுபகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் குறித்த பாதையாத்திரையில் பங்கெடுத்துவருகின்றனர்.

14 நாட்கள் இடம்பெறவுள்ள குறித்த பாத யாத்திரையில் கலந்து கொள்பவர்களிட் நன்மை கருத்தி லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் பனாமைப்பற்று பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை நடைபயணத்தில் ஈடுபடும் அடியவர்களுக்கான அத்தியாவசியபொருட்கள் அடங்கிய பொதிகளும் லைக்கா ஞானம் அறக்கட்டளையினூடாகவழங்கிவைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு (2024) முதல் லைக்கா ஞானம் அறக்கட்டளையினர் குறித்த பணியினை பக்தர்களின் நன்மை கருதி மேற்கொண்டுவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

Share this Article