கதிர்காம காட்டுப்பாதை எதிர்வரும் 20 இல் திறக்கப்படும்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதையாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் ஜூன்20 வெள்ளிக்கிழமைதிறக்கப்பட்டு, மீண்டும் ஜூலை04 இல் மூடப்படும் என, அம்பாறை மாவட்டஅரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல்விழா 26 ம் திகதி ஆரம்பமாகி ஜூலை11தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன்ஆலயத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்துகதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாகும்.

வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி காலை உகந்தமலை முருகன் ஆலயத்தில்நடைபெற இருக்கும் ஆரம்ப வைபவத்தை அடுத்து காட்டுப்பாதை காலை ஆறுமணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மாத்திரமே திறந்து இருக்குமெனவும்அக் காலப்பகுதிக்குள் மட்டுமே காட்டுக்குள் செல்ல யாத்திரீகர்கள்அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article