கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தரும் வாகனங்களின் நடைமுறை தொடர்பில் அறிவிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும்வாகனங்கள் தொடர்பில் விமான நிலையமும் விமானச் சேவை நிறுவனமும்அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அதன்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குவருகை தரும் வாகனங்கள் சாரதிகள் இன்றி விமான நிலையத்திற்கு அருகில்நிறுத்தி வைக்கத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் விமானப் பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக வருகை தரும் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகைமுனையத்தை விட்டு வெளியேற வேண்டும்.

இதேவேளை 30 நிமிடங்களுக்கு மேல் விமான நிலையத்திற்கு அருகில் சுற்றித்திரியும் வாகனங்களின் சாரதிகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைகட்டுப்படுத்துவதற்காகவும் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article