கடலோர இரவுப் பொழுது உறங்காத கொழும்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை மேம்படுத்தி உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், சுற்றுலாத்துறையை முன்னேற்றல் மற்றும் கொழும்பு நகரில் மக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் வழங்கப்படும் அனுபவங்களை விரிவுபடுத்த கட்டமைப்பு ரீதியான திட்டமிடல் அவசியமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு, ‘கடலோர இரவுப் பொழுது: உறங்காத கொழும்பு’ (Marine Nights: Awakening Colombo) என்ற தொனிப்பொருளின் கீழ், கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரையிலான 7.4 கிலோமீற்றர் தொலைவிலான கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில், காலி முகத்திடலிலிருந்து புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரையிலான 400 மீற்றர் நீளமான பிரதேசம் பிரதான கவனத்துடன் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share this Article