கஞ்சா தொடர்பில் தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கோப்பாய் பகுதியில்  நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில்இருபாலை – மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர்கொல்லப்பட்டார்.

குறித்த பகுதியில் நேற்று (ஜூன்14) முற்பகல் கோப்பாய் பொலிஸார்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகக் கூறப்படும்கொலைசெய்யப்பட்ட குறித்த நபர் நேற்றிரவு தமது வீட்டுக்குச் சென்றநிலையில், அவர் மீது கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்ததாகக்கூறப்படும் தரப்பினர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த குறித்த அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள் அடையாளம்காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிதெரிவித்தார்.

தாக்குதலை மேற்கொண்டவர்களில் பெண்களும் அடங்குவதாகத்தெரிவிக்கப்படுகிறது

Share this Article