கச்சதீவு திருவிழா போக்குவரத்து தொடர்வாக நெடுந்தீவு தனியார் படகு உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு, நெடுந்தீவு – கச்சதீவு மற்றும் நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான கடல் போக்குவரத்து சேவைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (17/02) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திரு. N. பிரபாகரன் தலைமையிலும், பிரதேச சபை உப தவிசாளர் ச. விமலதாஸ் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் படகு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

திருவிழா காலப்பகுதிக்கான சேவை நேர அட்டவணை மற்றும் ஒழுங்குகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment