கச்சதீவு அந்தோனியார் ஆலய கொடியேற்றம் பக்தியுடன் இடம்பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (மார்ச் 14) மாலை 4.15 மணியளவில் கொடியேற்றத்துடன ஆரம்பமாகியது.

ஆலய திருக்கொடியினை இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட ஆயர், அருட்கலாநிதி லூர்து ஆனந்தம் ஆண்டகை  வர்கள் ஏற்றிவைத்ததுடன் , யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர்  வணக்கத்துக்குரிய  அருட்தந்தை P.J. ஜெபரட்ணம் அடிகளார் மற்றும் நெடுந்தீவு பங்குத்தந்தை ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

பல்லாயிரக் கணக்கான இந்திய இலங்கை பக்தர்களின் செப வேண்டுதலுடன் கொடியேற்றம் பக்தியுடன் இடம்பெற்றது.

Share this Article