க. பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கானவிண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9, 2025 வரைஇணையவழியில் கோரப்படும் என கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றில்தெரிவித்துள்ளது.

அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப்பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள்இணையவழியாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.

தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்குவிண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தவேண்டும்.

தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள்பாதுகாவலர் (தாய் அல்லது தந்தை) இன் தேசிய அடையாள அட்டையைப்பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களானwww.doenets.lk அல்லதுwww.onlineexams.gov.lk/eic இல் உள்ளவழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களைச் சரியாகச் சமர்ப்பிக்கவேண்டும் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Article