க.பொ.த உயர்த்தில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும்  நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள நெலும்பியச மண்டபத்தில் இன்று (21/12)  நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வட மாகாணத்தில்  உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய மாணவர்கள் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் 2023/2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித் திட்டமாக இது அமைந்திருந்தது.

கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி,முல்லைத்தீவு,மன்னார் மற்றும் வவுனியா, மாவட்டங்களில் 2023/ 2024 ஆம் ஆண்டுகளுக்கான  க.பொ.த உயர்தரப் பரீட்சையில், 6 பாடத்துறைகளின் கீழ் 1 முதல் 10 வரையான இடங்களைப் பெற்ற 300 மாணவர்களுக்கு  ஊக்கத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே அவர்கள்  வரவேற்பு மற்றும் நோக்கங்களை தெளிவுபடுத்தும் உரையை நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்  சந்திரசேகர் ,கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க,வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் ,சிறீபவானந்தராஜா, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே, வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர். மாவட்ட அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள் இராணுவ அதிகாரிகள், பொலிஸ்  அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள்,மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article