ஒளி விழாவுக்கு செலவழிக்கும் பணத்தை அவதியுறும் மக்களுக்கு வழங்குங்கள் – மன்னார் ஆயர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட புயலாலும் வெள்ளத்தாலும் பெருந் தொகையான மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்திருப்பதையிட்டு இவ்வருடம் மன்னார் மறைமாவட்ட பங்குகளில் ஒளி விழாவை நடத்தாது அதற்கான செலவுகளை பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை பங்குத் தந்தையர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அகில உலகத் திருச்சபையானது வருடந்தோறும் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு தங்கள் பங்குகளிலும் இடங்களிலும் ஒளி விழாவை சிறப்பாக கொண்டாடி வருவது வழமையாகும். இதில் மன்னார் மறைமாவட்டமும் விதிவிலக்கல்ல

ஆனால் இம்முறை ஒளி விழாவை மன்னார் மறைமாவட்டத்தில் பங்குத் தளங்களில் சிறப்பிக்க வேண்டாம் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஆண்டகை பங்குத் தந்தையர்களிடம் கேட்டுக் கொண்டார்.

நாடு பூராகவும் எமது நாட்டு மக்கள் அண்மையில் எற்பட்ட வெள்ளப் பெருக்காலும் புயலாலும் மண் சரிவினாலும் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதியுறும் இவ்வேளையில் நாம் யாவரும் அவர்களுக்கு உதவிக் கரங்கள் நீட்ட வேண்டிய நிலையில் இருப்பதால் ஒளி விழாவுக்கு செலவழிக்கும் செலவுகளை பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு கொடுத்து உதவுவோம் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share this Article