ஒக்டோபர் மாதம் முதல் குறைந்த கட்டணத்தில் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஒக்டோபர் மாதம் முதல் நவீன கடவுச்சீட்டை குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும்அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (செப்.03) நடைபெற்றஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக கடவுச்சீட்டு வழங்கும் நிறுவனத்தைத் தவிர வேறுநிறுவனத்திடமிருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கடவுச்சீட்டு பெறுவதில்காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அதற்காக அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். புதியதொழில்நுட்ப டிஜிட்டல் முறைகள் இல்லாமல் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குள்நுழையவும் முடியாது.

ஏனைய நாடுகளின் விதிமுறைகளின்படி டிஜிட்டல் அடையாள அட்டைதயாரிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தப்படி, விலைமனு கோரல் அழைப்புகள்மற்றும் கொள்முதல் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படவேண்டும்.

எனவே, நீண்ட காலமாக கடவுச்சீட்டு வழங்கிய நிறுவனத்தைத் தவிர வேறுநிறுவனத்திடமிருந்து டிஜிட்டல் கடவுச்சீட்டை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. அந்த நாடுகளின்கடவுச்சீட்டுகளை ஒக்டோபர் மாதம் வரை அச்சிட முடியாது.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறைகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள்தயாரிக்கப்படுகிறது.

இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டை விட குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடியநவீன கடவுச்சீட்டு ஒக்டோபர் மாதம் கிடைக்கும் என அமைச்சரவை பேச்சாளர்பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share this Article