இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலை முடிவுச் சூத்திரத்தின்படி, 2025 ஒகஸ்ட் மாதத்திற்காக எரிபொருள் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், தற்போது அமலில் உள்ள விலைகள் பின்வருமாறு:
லங்கா வெள்ளை டீசல் – ஒரு லீற்றருக்கு ரூ.289
லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 – ரூ.325
92 ஒக்டேன் பெற்றோல் – ரூ.305
95 ஒக்டேன் பெற்றோல் – ரூ.341
மண்ணெண்ணெய் – ரூ.185
இதனடிப்படையில், ஒகஸ்ட் மாதத்திலும் இவ்விலைகளில் எரிபொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.