ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தெரிவத்தாட்சிஅலுவலருடன்சந்திப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில்தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின்தேர்தல் கண்காணிப்பு  குழுவினர்  நேற்றையதினம் (செப். 26) யாழ்ப்பாணமாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம்பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்துகலந்துரையாடினார்கள்.

இச் சந்திப்பில் கருத்து தெரிவித்த   ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல்கண்காணிப்பு குழுவினர், யாழ்ப்பாணத்தில் தம்மால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல்  கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியமைக்காகதெரிவத்தாட்சி அலுவலருக்கும், உத்தியோகத்தர்களுக்கும் நன்றியினைத்தெரிவித்ததுடன், தேர்தல் சிறப்பாகவும் சுமூகமாகவும் நடைபெற்றதாக தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணத்தின் தேர்தல்கண்காணிப்பு நடவடிக்கைகளிலும், எம்முடன் பல முன்னாயத்தகலந்துரையாடல்களில் ஈடுபட்டமைக்காக தெரிவத்தாட்சி அலுவலர் என்கின்றரீதியில் அரசாங்க அதிபர் தமது நன்றியினைத் தெரிவித்தார்.

இச்  சந்திப்பில்  ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின்  கண்காணிப்பாளர்கள் நிக்கோலஸ் குகூலிஸ் மற்றும்  ஜோஹான்னா வான் சம்பீக்மற்றும்  மாதுமை பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article