ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் ரணிலுக்கு ஆதரவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும்தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவைவழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர்ஸ்டான்லி அறிவித்துள்ளார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்துகலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று நாட்டின் தலைமைத்துவத்தை கோரும் சஜித் பிரேமதாச, அன்றுநெருக்கடியான காலத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்கமுன்வரவில்லை.

மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள்.

தனியொரு உறுப்பினராக நாடாளுமன்றத்தில் செயற்பட்ட தற்போதையஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலைஏற்றுக்கொண்டதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிமுழு நாட்டினதும் வெற்றியாக அமையும்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும்தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவு” எனகுறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, குறித்த சந்திப்பின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யாழ். மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்கள் இணைப்பாளராக விக்டர் ஸ்டான்லியை  நியமித்துள்ளார்.

Share this Article