ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு நாடுகளின் தூதுவர்கள், நேற்று (மே 15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கை சந்தித்து, உத்தியோகபூர்வமாக தங்களின் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

இந்த தூதுவர்கள் ஆஜன்டீனா குடியரசு, சிம்பாப்வே குடியரசு, இஸ்ரேல், பிலிபைன்ஸ் குடியரசு, டஜிகிஸ்தான் குடியரசு, கம்போடியா இராச்சியம் மற்றும் டென்மார்க் இராச்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோராவர்.

நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்கள் விவரம் பின்வருமாறு:

  1. மாரியானோ அகுஸ்டின் கவ்சினோ – புதுடில்லியில் உள்ள ஆஜன்டீனா தூதரகம்

  2. ஸ்டெல்லா ந்கொமோ – புதுடில்லியில் உள்ள சிம்பாப்வே தூதரகம்

  3. ரூவென் ஹவீயர் அசார் – புதுடில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம்

  4. நினா பி. கயிங்லெட் – டகாவிலுள்ள பிலிபைன்ஸ் தூதரகம்

  5. லுக்மொன் போபோகலொன்சோடா – புதுடில்லியில் உள்ள டஜிகிஸ்தான் தூதரகம்

  6. ரத் மெனி – புதுடில்லியில் உள்ள கம்போடியா தூதரகம்

  7. ரஸ்மஸ் கிறிஸ்டென்சன் – புதுடில்லியில் உள்ள டென்மார்க் தூதரகம்

இந்த நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Share this Article