எல்லையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து – 15 பேர் பலி, பலர் கவலைக்கிடமான நிலையில்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (செப் 04) இரவு ஏற்பட்ட துயரகரமான விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 9 பேர் பெண்கள் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்து 24ஆவது கிலோமீற்றர் தூணருகில் இடம்பெற்றது. எல்லையில் சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய தங்காலை மாநகரசபை ஊழியர்கள் சுமார் 30 பேரை ஏற்றிச் சென்ற பஸ், சாலையிலிருந்து விலகி சுமார் 500 மீற்றர் ஆழமான பள்ளத்தில் பாய்ந்தது.

இதில் 11 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 15 பேருக்கும் மேற்பட்டோர் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் உடல்நிலை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நிகழ்ந்த உடனடியாக மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Article