எல்லை தாண்டிய 07 இந்திய மீனவர்கள் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கைகடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (ஜூலை12) காலைவிசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதன்போது காங்கேசன்துறைவடமேற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்தஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர்கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் படகுடன் கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ஏழு பேரும் படகுடன் மயிலட்டிமீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம்ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Share this Article