எலிக்காய்சல் ஏன் திடீரென பரவுகிறது? மழை வந்து வெள்ளம் வந்ததால் பரவுகின்றது.
லண்டன் வைத்தியர் சிவச்சந்திரன் சிவஞானம் Dr. Sivachandran Sivagnanam விடுக்கும் முக்கிய எச்சரிக்கை!
கடைசிவரை வாசியுங்கள்!
எப்படி வருகின்றது?
மிருகங்களின் யூரின் வெள்ள நீரோடு கலந்து நீங்கள் அன்றாடம் பாவிக்கும்நீரோடும் கலக்கலாம். உங்களுக்கு உடம்பிலே சின்ன காயங்கள் இருந்து யூரின்கலந்த நீர் அந்த காயத்தோடு பட்டால் உங்களுக்கு நோய் தொற்று ஏற்படும்.
என்னடா எலிட யூரினுக்கு அவ்வளவு பவர் இருக்கா என்று நீங்கயோசிக்கிறீர்களா?
எல்லா எலியின் யூரினும் அப்படி நோயை ஏற்படுத்தாது.
பாக்டீரியாக்கள் என்பவை கண்ணுக்குத்தெரியாத குறுணிக்குறுணிஉயிரினங்கள். அதில் லட்சக்கணக்கான வகைகள் உள்ளன. அதாவதுமிருகங்களில் ஆடு, மாடு, கோழி என்று இருப்பது போல் பக்டீரியாக்களிலும்இருக்கின்றது. அவற்றில் சில மனிதனுக்கு நோயை ஏற்படுத்தி கொலையும்செய்யும். கண்ணுக்குத் தெரியாத கைப்பிள்ளை பக்டீரியா கொலையும்செய்வான்!
இந்த எலிக்காய்ச்சலும் அப்படி ஒரு பாக்டீரியா மூலமே ஏற்படுகின்றது..
கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள் , அதை கண்டு பிடித்து பெயர் வைத்து , அதில் எது எது எந்த நோயை ஏற்படுத்துகிறது என்றும் கண்டு பிடித்து, அதைவேட்டையாட மருந்தும் கண்டு பிடித்த சல்லிப் பய சேர் இந்த மனித இனம்.
சரி விஷயத்துக்கு வருவோம்?
லெப்டே ஸ்பைரசிஸ் என்று ஒரு வகை பாக்டீரியா உள்ளது. இது எலி போன்றவிலங்கினங்களில் தொற்றும். ஆனால் அவைகளுக்கு நோயை ஏற்படுத்தாது. அந்த மிருகங்களின் கிட்னியில் போய் சுகமாய் இருந்து கொள்ளும் இந்தபாக்டீரியாக்கள் அந்த மிருகங்களின் கிட்னியில் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் நைசாக நழுவிஅவற்றின் யூரினோடு சேர்ந்து வெளியே வரும். அந்த யூரின் தேங்கி இருக்கும்நீர்களில் கலந்தால் அந்த தண்ணீரில் குடியிருக்கத் தொடங்கும்.
அப்போது யாராவது அந்த நீரில் விளையாடினால், அல்லது விவசாயிகள் வயலில்தேங்கி இருக்கும் நீரில் இறங்கி வேலை செய்தால் அவர்களின் தோலில் சின்னகாயம் அல்லது உராய்வுகள் இருந்தால் போதும், இந்த பாக்டீரியாக்கள் ஈசியாஅவங்கட உடம்புக்குள் உள் புகுந்திடும். அல்லது கண் வாய் போன்ற மெல்லிய சீதமென்சவ்வு உள்ள உறுப்புக்கள் ஊடாக உள்ளே போயிடும்.
எலி போன்ற மிருகங்களில் அம்பியாக இருந்த இந்த பாக்டீரியா மனிதனுக்குள்போனதும் அன்னியனாக மாறிவிடும்.
மனிதனுக்குள் போனதும், அது லெப்டோஸ்பைரசிஸ் என்ற நோயை உருவாக்கும். தமிழில் அதை எலிக்காய்ச்சல் என்று சொல்கிறோம். அது உண்மையில் எலியில்இருந்து மட்டும் பரவுவதில்லை.
மற்றைய மிருகங்களில் இருந்தும் பரவும். இது எலி, ஆடு, மாடு, பன்றி போன்றஉயிரினங்களில் இருந்து பிரதானமாக பரவினாலும் எந்தவொரு பாலூட்டியின்யூரினில் இருந்தும் மனிதனுக்குப் பரவலாம்.
இந்த நோய் ஏற்பட்டால் என்ன என்ன அறிகுறிகள் ஏற்படும்?
ஆரம்ப அறிகுறிகளாக
காய்ச்சல்
தலையிடி
வாந்தி வருவது போன்ற உணர்வு/ வாந்தி
கண்களில் அலர்ச்சி , எரிச்சல்
போன்றவை ஏற்படும் .
நோய் தீவிரமாகும் போது,
ஈரல் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு , மூளைக்காய்ச்சல் , நுரையீரல் பாதிப்புபோன்றவை ஏற்படலாம். இந்த நிலமைக்கு போனால் மரணம் கூட ஏற்படலாம்.
ஈரல் செயல் இழந்தால் கண் மஞ்சள் ஆகலாம்.
இந்த கிருமி தொற்றும் எல்லோருக்கும் நோய் வருவதில்லை. நோய் வருகின்றஎல்லோரும் இறப்பதில்லை. ஏனென்றால் இதற்கு மருந்து உள்ளது .
ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் நோய் தீவிரமாகாமல் தப்பி விடலாம். அதனால் இப்போதைய நிலையில் ஒரு நாளைக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால்உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள். நோய் தீவிரமாகும் வரை வீட்டில்இருந்துவிட்டு பிறகு குத்துது குடையுது என்று சொல்லாதீர்கள்.
அதற்கு முதல் இந்த நோய் தெற்றாமல் உங்கள் குடும்பத்தையும் உங்களையும்பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
இதைத் தடுக்க மனிதன் பயன்படுத்தக்கூடிய வக்சீன் இல்லை என்றாலும்இலகுவாக இந்த நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
அப்படிப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
இந்த நோய் கோரோனா போல் மனிதனில் இருந்து மனிதனுக்கு தொற்றி சேம்சைட் கோல் அடிப்பதில்லை.
மிருகங்களில் இருந்து , நீர்மூலம் மனிதனுக்கு தொற்றுவதால் , அந்த நீர் கலந்தஇடங்களை கவனமாக டீல் பண்ணினாலேயே இலகுவாகத் தப்பித்து விடலாம்.
முதலில் தேவையில்லாமல் வெளியில் தேங்கி இருக்கும் நீர் தேக்கங்களில்இறங்காதீர்கள். இப்போதைக்கு சின்ன சின்ன குளங்கள் ஆறுகளில் குளிப்பதைதவிருங்கள். உங்கள் ஏரியாக்களில் சின்ன சின்ன இடங்களில் தண்ணீர் தேங்கிநின்றால் அவற்றை பாதுகாப்பாக அகற்றுங்கள்.
நீரில் வேலை நிமிர்த்தம் இறங்க நேர்ந்தால் தண்ணீர் உட்புக முடியாத அங்கிகள்இருந்தால் அவற்றை அணியுங்கள். நீர் உட்புக முடியாத நீளமான பாதணிகள்வாங்க முடிந்தால் வாங்கி பயன்படுத்துங்கள்.
உங்கள் உடம்பில் காயங்கள், சின்ன உராய்வுகள் இருந்தால் அவற்றைபிளாஸ்டர் போட்டு ஓட்டுங்கள்.
தண்ணீரில் இறங்கி வேலை செய்தால் உடனடியாக நன்றாக ஒரு குளியல் போட்டுவிடுங்கள். உங்கள் கிணறுகளில் வெள்ள நீர் கலந்திருந்தால் கொஞ்ச நாளைக்குநீரை சூடாக்கி குளியுங்கள். கொதித்தாறிய நீரை குடியுங்கள்.
முக்கியமாக இந்த விடயத்தையும் ஆபத்தையும் மக்களிடம் பரப்புங்கள். மக்கள்தெளிவூட்டலே இந்த நோயை கட்டுப்படுத்த முக்கிய தேவை !
இதை பிரிண்ட் பண்ணி பாடசாலை பிள்ளைகளுக்கு கொடுங்கள்.
ஊர்க் கோயில் ஸ்பீக்கரில் இந்த நோய் பரவுவதை அறிவித்து , தடுப்பதற்கானவழிமுறைகளை சொல்லுங்கள்.
இந்தப்படம் பதிவினை எந்த தனி நபரும் ஊடகங்களும் சமூக நலன் கருதி என்அனுமதியோ பெயரோ இல்லாமல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்தப் பதிவை அதிகம் பகிருங்கள்.
எல்லோரும் ஒன்று சேர்ந்தால் இலகுவாக இந்த நோயைக் கட்டுப்படுத்திவிடலாம்.