எரிவாயுவின் விலைகள் குறைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

லிட்ரோ எரிவாயுவின் விலைகள் குறைப்பு – புதிய விலை அறிவிப்பு.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின்விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ  கிராம் எடை கொண்ட எரிவாயு 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,790 ரூபாவாகும்.

5 கிலோ  கிராம் எடைகொண்ட எரிவாயு 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதன்  புதிய விலை 1522 ரூபாவாகும்.

மேலும், 2.3 கிலோ கிராம் எடைகொண்ட  எரிவாயு  28 ரூபாவினால்குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதன்  புதிய விலை 712 ரூபாவாகும்.

லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைக்கப்பட்டது

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று (ஜூன்04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால்குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாகதிருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

Share this Article