எரிபொருள் விலை குறைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், திங்கட்கிழமை (செப்.30) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம்.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால்குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லைஎன பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டுஅதன் புதிய விலை 319 ரூபாவாகும்.

இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால்குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.

Share this Article