தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் பயணித்த வாகனம் இன்றைய தினம் (ஏப்ரல் – 30) காலையில் விபத்துக்குள்ளானது.
அதிவேக நெடுஞ்சாலையில் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அண்மையில் வாகனம் விபத்துக்குள்ளானது.
வாகனம் மூன்று முறை உருண்டு பலத்த சேதத்திற்குள்ளானது வாகனம் மீளவும் பாவிக்க முடியாத அளவிற்கு சேதத்தினை ஏற்படுத்தியபோதும், தெய்வாதீனமாக வாகனத்தில் பயனித்தவர்களுக்கு ஆபத்து ஏற்படவில்லை.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பாக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம் பெறும் வழக்கில் முன்னிலையாகவே பயணித்துக் கொண்டிருந்தபோதே இவ் வாகன விபத்து இடம் பெற்றுள்ளது.
ஆயினும் பிறிதொரு வாகனத்தின் உதவியுடன் அவரது பிரயாணம் கல்முனை தொடர்கின்றது
சுமந்திரன் அவர்களது வாகனத்திற்கு பின்னால் வந்த வாகனமும் அதே இடத்தில் வழுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.