எதிர்வரும் ஏப்ரல் 15 அரச விடுமுறை இல்லை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்ததாவது, எதிர்வரும் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பரவி வரும் தகவல்கள் உண்மையற்றவை எனக் கூறினார்.

அடுத்து வாரம் பெரிய வெள்ளி வருகின்றதனால், அந்த நாள் மட்டும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், 15ஆம் திகதி தொடர்பாக இதுவரை எதுவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.

மொத்தம் வேலை செய்வதற்கான நாட்கள் 3 மட்டுமே இருப்பதால், 15ஆம் திகதியை விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Share this Article