10 மில்லியன் ரூபா லஞ்சம் கேட்டதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு இன்று (நவம்பர் 11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மூவரையும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (நவம்பர் 10) கைது செய்யப்பட்டனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வேலைத்திட்டம் ஒன்றிற்காக 10 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.