ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு இரண்டாவது தடவையாகவும் இன்று (08/12) தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளரது தன்னிச்சையான சிறப்பு அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாகவுள்ளது.
ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது பாதீடு கடந்த நவம்பர்24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்தப் பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதறகான விசேட அமர்வு
இன்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தவிசளர் அன்னராசா தலைமையில்
மீண்டும் இடம்பெற்றது.
இதன்போது வருமானம் ஏதும் இல்லாத நிலையில்
சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள், சிறப்பு வருவாய் முயற்சிகள், உள்ளிட்ட பல திருத்தங்கள் என
திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு
இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இன்நிலையில் மக்கள் நலனோ, தற்போதைய அவசர தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதாக அமையாத குறித்த பாதீடு மீண்டும் முன்மொழியப் பட்டுள்ளதாகவும், நடைமுறை சாத்தியமான விடையங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி உறுப்பினர்கள்
பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர் பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாகவும் விடப்பட்டது.
பாதீட்டை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது எதிராக 8 வாக்குகளும் ஆதரவாக 05 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடு மேலதிக 03 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.
இருந்தும் தவிசாளர் தனது சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு பதீட்டை செயற்படுத்த உத்தரவிட்டிருந்தார்.