ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்நிகழ்வுகள் இன்றைய தினம் (ஓகஸ்ட் 01) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார்தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவபடத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது.
யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கைமாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின்முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை படுகொலை செய்யப்பட்டார்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த அதிகாலை 5.00 மணியளவில் அவரதுவீட்டிற்கு சென்ற ஆயுதாரிகள் அவரை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள்முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.