உமண்டாவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இன்றையதினம் (ஆகஸ்ட்15) நெடுந்தீவு பிரதேச கல்வி, சுகாதார தேவைகளுக்கான உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திருமதி நிவேதிகா கேதீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உமண்டாவநிகழ்ச்சித்திட்டத்தின் ஸதாபகர் ஶ்ரீ சமந்தபத்ரா தேரர் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்க வைத்தார்.
நெடுந்தீவு கோட்டத்தில் உள்ள 08 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், 06 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், நெடுந்தீவு மகாவித்தியாலயத்திற்கு கிறிக்கற் அணிக்கான கடினப்பந்து உபகரணங்களும் வழங்க வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு பழவகைகளையும் வழங்கிவைத்துள்ளனர்.
இதேவேளை நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் தள்ளுவண்டிகளும் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நெடுந்தீவு கோட்டப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரி , நெடுந்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.