உடன் அமுலுக்கு வரும் வகையில் “யுக்திய” நடவடிக்கைகள் நிறுத்தம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யுக்திய நடவடிக்கைகளுக்காக விசேட கடமையாற்றிய பொலிசார்அனைவரையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்துவிடுவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, யுக்திய நடவடிக்கையை அமுலாக்குவதில் உள்ள குறைபாடுகளைஅவதானித்து, அவற்றை சரிசெய்து, சட்டத்தின் மூலம் பொலிஸாருக்குவழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பொலிஸார் தொடர்ந்துநடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய பணிகளில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளைவழிநடத்துவதன் மூலம், அவர்கள் எதிர்காலத்தில் அதிக திறனுடன்செயல்படுவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகளின் பற்றாக்குறை காணப்படுகிறது எளவும்அந்த பற்றாக்குறைக்கு மாற்று தீர்வாக, இதுவரை ஏனைய பணிகளில்அமர்த்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு பொதுப்பணியின், குறிப்பாககுற்றச்செயல்களை தடுக்கும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article