ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படவுள்ள இராணுவத்தினர் – ஜனாதிபதி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர்கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கஅறிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது அங்கு வாழும் இலங்கை மக்கள்மத்தியில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஏற்பட்ட தாமதம் குறித்துஇலங்கையர் ஒருவர் ஜனாதிபதியிடம் குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

2019ஆம் ஆண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, குற்றப் புலனாய்வுத்துறையில் 500 பதவிகள் மாற்றப்பட்டன.

விசாரணைக்குப் பொறுப்பான முன்னாள் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். விசாரணைக்கு பொறுப்பான அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

தடைகள் இருந்தபோதிலும், விசாரணை செயல்முறை முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதற்கமைய, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலர்ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் பல இராணுவஅதிகாரிகள் கைது செய்யப்பட உள்ளனர்.

குறிப்பிட்ட காலக்கெடுவை குறிப்பிட முடியாவிட்டாலும், விசாரணைகள் சரியானதிசையில் நகர்கின்றன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும்தெரிவித்துள்ளார்.

Share this Article