ஈழத்தின் சிறு தீவுகள், மிகக் குறிப்பாக வட மாகாணத்தில் அமைந்துள்ளவை, மிகவும் உயிர்ப்பானவை தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒரு புவியியல் குவிமையங்கள் எனலாம். நீண்டகாலமாக இத்தீவுகளின் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தி பற்றியான கரிசனை என்பது அரச மட்ட திட்டமிடலில் இல்லை எனக் கூறமுடியும்.
நான்கு தசாப்த போர் காலம் சிறுதீவுகளின் மக்களை வாட்டியது: வதக்கியது, கணிசமானவர்களை வெளியேற்றியது மற்றும் நிண்டகாலமாக ஒரு சிறை வாழ்வு மையங்களாக உருக்கொள்ள வைத்தது. போரின் உச்ச அதிர்வுகளை உள்ளிழுத்து உலர்ந்து கசங்கிப்போன வாழ்விடங்கள் ஈழத்தின் சிறு தீவுகள் எனலாம். ஒரு கைவிடப்பட்ட வடமாகாணத்தின் முதன்மையான பொருளாதார மையங்கள் எனக் கூறினால் தவறில்லை. பல சிறு தீவுகளில் சில சிறு தீவுகள் எமது அதிகூடிய கவனம் பெறுபவை. இப்பந்தியின் நோக்கம் வட மாகாணத்தின் சிறு தீவுகளையும் மக்களின் நிரந்தர வசிப்பிடமாகாத மிகச் சிறு தீவுகளையும் கவனம் கொள்கிறது.
வடமாகாணத்தின் தீவுகள் யாழ்.மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டத்தினுள் நிர்வாக ரீதியாக அமைந்துள்ளன. சிறு தீவுகள் மீதான ‘அபிவிருத்திக் கவனம்’ மிக குறைவாக இருப்பதற்கு இந்த நிர்வாக எல்லைகளின் வகைப்படும் தன்மையும் நெய்தல் நிலத்தின்- முழுப்பரப்பின் சமூக – பொருளாதார மற்றும் அதன் அமைவிட முக்கியத்துவத்தை உணர தலைப்படவில்லை எனக்கருத இடமுண்டு.
போரின் கணங்கள் மிகவும் பாதித்த அளவைவிட தற்போதைய தீவுகளின் சூழலியல் பாதுகாப்புயின்மை நிலைலை மிகவும் சிக்கலாகியுள்ளது. மனித சமூகங்கள் தங்கள். நலன் கருதி இத்தீவுகளின் வளங்களை சுரண்டுவதன் தன்மை ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகி வருகிறது. தொடரும் பல்நிலை வளச்சுரண்டல்சன் இலகுவில் சிறு தீவுகளின் சிதைவுக்கு வித்திடுகின்றன. குறிப்பாக தமிழக மீன்பிடி இழுவைப்படகுகளின் எல்லைமீறிய மீன் பிடிமுறைகள் தீவுகளின் சக வாழ்வையே படிப்படியாக அழிக்கும் நிலைக்கு இன்றைய நிலைமை மாறி வருவது உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விடயமாகும்
ஈழத்தின் சிறு தீவுகள் மிகவும் உயிர்ப்பானவை.தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒரு குவியம். பாதிக்கப்படக்கூடிய சிறு தீவுகளின் சிக்காது மனித சமூகங்கள் தங்கள் நவன் கருதி வளங்களை சுரண்டுவதன் மூலம் உருவாகிறது தொடரும் வளச்சுரண்டல் இலகுவில் சிறு தீவுகளின் சிதைவுக்கு வித்திடுகிறது.
மிகவும் கவனத்துக்குரிய விடயம் யாதெனில், இத்தீவில் நிரந்தர வாசிப்பாளர்களின் வாழ்வாதாரங்கள் குறிப்பாக மீன்பிடித்துறை சார் நடவடிக்கைகள் பற்றிய அரச மட்ட மட்டத்திலான அக்கறையை விட தீவு வாழ் மக்களின் அக்கறை என்பது பன்மடங்கு குறையாக உள்ளமை அவதாளிக்கக் கூடியதாக உள்ளது. போரின் சிதைவு என்பது மக்களின் வாழ்விடம் மீதான நம்பிக்கையையும் சிதைத்து விட்டது எனலாம். இத்தீவுகளின் மக் கள் தொகை குறைவடையும் நிலை என்பது நாளாந்தம் தீவுகளின் கைவிடப்படும் நிலைக்கு வழிவகுத்துள்ளது. நெடுந்தீவின் நிலையான அபிவிருத்தி நோக்கிய கவனம் தற்போது அவதாளிக்கக்கூடியதாக உள்ளது. இது மிகவும் காத்திரமானது நெடுந்தீவு மக்கள் உணர்ந்த ஒரு முன்ளெடுப்பு. நெடுந்தீவின் அபிவிருத்தி தொடர்பான ஆரோக்கியமான ஒரு உதாரணம்.. நெடுந்தீவை நிலையான அபிவிருத்தி செய்யும் நோக்கில் நெடுந்தீவு ஊரும் உற வும் (DOU) நிறுவனத்தினால் மீண்டும் ஊருக்குப் போகலாம் எனும் தொனிப்பொருளில் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமது ஊரின் உறவுகளை ஒன்றிணைத்து 04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை நெடுவூர்த் திருவிழா (REUNION OF THE PEOPLE OF DELFT) நடத்துவதற்கு தீர்மானித்து முன்னாயத்த செயற்பாடுகள் செய்யப்பட்டமை அதாவது மீண்டும் ஊருக்குப்போகலாம் என்ற மகுடம் ஒரு சமூக விழிப்பில் தெரிகிறது.இது பாராட்டப்பட வேண்டியர முன்னெடுப்பு, தீவின் மைந்தர்கள் பலர் சர்வ தேச நாடுகள் சார்ந்தும் இலங்கையின் மாவட்டங்கள் சார்ந்தும் தூரநோக்கு சிந்தனைய டல் அபிவிருத்திக் குழுக்களாகஊரின் உறவுகள், நண்பர்கள். சமூக ஆர்வலர்கள் பலரை ஒன்றிணைத்து நீண்டகால நோக்கில் தொடர்ந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளனர். இவற்றினூடாக காத்திரமான பணியினை மேற்கொள்ளும் வகையில் உள்ளூர், இலங்கை, சர்வதேச மட் டத்தில் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
நெடுந்தீவில் உள்ள மக்களுக்கும் தீவுக்கு அப்பால் உள்ள மக்களுக்கும் இடையேயான தொடர்புகளை ஊக்குவிக்கவும். மக்களின் ஆதரவுடன் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பு “நாம் செல்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஒரு திருவிழாவை நடத்தியது. ஏழு திருவிழா நாட்களில், உள்ளூர் உணவு உற்பத்தி மற்றும் மூலிகைகள், பனை, கடல் உணவுகள், விவசாயம் மற்றும் கைவினைப்பொருட்கள் தொடர்பான திறள்களை பங்கேற்பாளர்களுக்கு கற்பிக்க உள்ளூர் தயாரிப்புகளை காட்சிப்படுத்த “ஊரும் உறவும்” ஏற்பாடு செய்தது. மேலும், விற்பனைக் கண்காட்சிகள், உணவுத் திருவிழாக்கள், வர்த்தக விற்பனை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்வுகள் பங்கேற்பாளர்
1.கடந்த காலத்தில்,15,000க்கும் மேற்பட்ட மக்கள் எங்கள் நிலத்தில், தீவில் வாழ்ந்தனர்.
அங்கு இப்போது சுமார் 4,200 பேர் வாழ்கின்றனர். மக்களின் கஷ்டங்களைக் குறைப்பதற்கும் சாத்தியமான வழிகளில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் மக்களிடையேயான தொடர்புகளை அதிகரிப்பதையும், பிணைப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொள்ளல்,
2) நெடுந்தீவை மேம்படுத்த, மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு. முக்கியமாக குழந்தைகள், இளைஞர்கள், ஒற்றைப் பெண்கள், பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்கள், முதியோர்கள் மற்றும் தீவின் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை கூட்டாக உருவாக்குதல்,
நோக்கங்களை அடைவதில் Delft Oorum Uravum (DOU) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முக்கியமாக ஆராய்ச்சி பொறிமுறைகளை உருவாக்கியது.இலங்கை மற்றும் அதற்கு அப்பால் உள்ள அபிவிருத்தி சிந்தனையாளர்கள் மற்றும் நிபுனர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் தீவிற்னை ஐந்து வருட அபிவிருத்தி திட்டத்தை உருவாக்கியுள்ளது. முக்கியமாக தீவின் பாரம்பரியம். கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்து வளமான வாழ்வுக்காக வளர்ந்த தீவாக மாற்றும் ‘நிகழ்வு அண்மையில் அரங்கேறியுள்ளது.
நெடுந்தீவின் மீண்டும் ஊருக்குப் போகலாம் நிகழ்வு ஒரு ஆரம்பமாக இருந்தாலும் ஒரு நம்பிக்கையை தருகிறது. ‘தேசம் கடந்தாலும் தாயகம் மீதாள அக்கறை குறையவில்லை என்பதை காட்டுவதற்கு நெடுந்தீவின் முன்னெடுப்பு சகல தீவுகளின் கூட்டு முன்னெடுப்பாக மாறவேண்டும், சகல தீவுகளின் ஒரு சம்மோனம் உருவாக்கப்பட வேண்டும் என்பது. அவசியமானதாக உணரப்படுகிறது.
தொடரும்….