இன்றைய சமூகத்தில் பெண்கள் வகிக்கின்ற முக்கியப் பங்கு மற்றும் அவர்களின்தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்குடன், இலங்கை பிரதமர் கலாநிதிஹரினி அமரசூரிய , பெண் தலைமைத்துவத்தின் அவசியத்தைவலியுறுத்தியதோடு, அதனை நிறைவேற்றும் திறன் இலங்கை பெண்வழிகாட்டிச் சங்கத்திடம் உள்ளதென தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பெண்களுக்கான தன்னார்வ அமைப்பின் ஓர் அங்கமானஇலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்தால், வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 01) அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஜனாதிபதி பெண் வழிகாட்டி விருது‘ வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத்தெரிவித்தார்.
இவ்விழாவில், ஒரு பெண் வழிகாட்டி பெறக்கூடிய மிக உயர்ந்த கௌரவவிருதான ‘ஜனாதிபதி பெண் வழிகாட்டி விருது‘ 306 பெண் வழிகாட்டிகளுக்குவழங்கப்பட்டது.
அதேவேளை, ‘பிரதமர் பெண் வழிகாட்டி விருது‘ 18 பேருக்கு வழங்கப்பட்டது.
விருதளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியமேலும் கூறியதாவது:
“இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்தால் வழங்கப்படும் ஜனாதிபதி மற்றும்பிரதமர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
1917 ஆம் ஆண்டில் கண்டியில் உள்ள மகளிர் உயர்தரப் பாடசாலையில்தொடங்கிய இந்த இயக்கம், இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது.
இதன் மூலம், 8 வயது முதலே பெண் குழந்தைகள் நாட்டிற்குத் தலைமைதாங்குவதற்குத் தேவையான வலுவான மற்றும் முழுமையான ஆளுமையைவளர்த்து, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல்மிக்க சிறுமிகளாகஉருவாவதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது.
நமது நாட்டிற்கு இதுபோன்ற வலிமையான எதிர்கால தலைமுறையே தேவை. இந்த விருது பெறுபவர்களின் அர்ப்பணிப்பும், அவர்களின் வெற்றிக்குப் பின்னால்இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், வழிகாட்டிகள் மற்றும் வழிகாட்டித்தலைவர்களின் ஆதரவும் மிகவும் பாராட்டத்தக்கது.
நான் உங்களிடம் பிரதமர் என்ற முறையில் மட்டுமல்லாது, என் சிறுவயதில் ஒரு‘சிறிய சிநேகிதியாக‘ (little friend) இந்த இயக்கத்தில் இணைந்த ஒருவராகவும்பேசுகிறேன். அப்போது நான் பெற்ற அனுபவங்கள், எனது பயணம் முழுவதும்எனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளன.
இந்த இயக்கம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும், தலைமைத்துவப்பண்புகளையும் அளித்து, ஒவ்வொரு பெண்ணும் நாட்டின் எதிர்காலத்தைக்கட்டியெழுப்புவதில் பங்களிப்பதற்கான சூழலை உருவாக்குகிறது. இதுபோன்றஇயக்கங்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது இதுதான்.
அதேபோன்று, எமது அரசாங்கம் செயல்படுத்தி வரும் கல்விச் சீர்திருத்தங்களின்மூலமும், இதுபோன்ற பிள்ளைகளை உருவாக்குவதையே நாங்கள் நோக்கமாகக்கொண்டுள்ளோம்.”
இந்த நிகழ்வில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசூரிய, பெண் வழிகாட்டிச் சங்கத்தின் தலைவர் சொர்ணிகா பிட்டிகல, தலைமைஆணையாளர் கலாநிதி குஷாந்த ஹேரத், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள்மற்றும் முன்னாள் ஆணையாளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், பெண்வழிகாட்டிச் சங்கத்தின் பல்வேறு மட்ட ஆணையாளர்கள் மற்றும் மாவட்டஆணையாளர்கள், பெண் வழிகாட்டித் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் விருதுபெற்றவர்கள் கலந்துகொண்டனர்.