இலஞ்ச குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்சமாக 10,000 ரூபாயைக் கோரி, அதனை வேறொருவர் ஊடாகப் பெற்றுக்கொள்ள முயன்ற போதே குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா பொலிஸ் நிலையத்தினுள் வைத்து நேற்று (31/12/2025) மாலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இந்த உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Article
Leave a comment