சீனாவின் மக்கள் விடுதலை இராணுவக்கடற்படை தளத்தை அமைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக வர்ஜீனியாவில் உள்ள வில்லியம் அண்ட் மேரி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாவது, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு ஏற்கனவே சீனா 2.13 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.
சீனாவின் இலக்குகளை அடைந்துக்கொள்ள இது அதிக வாய்ப்பாக அமையவுள்ளது. சீனாவின் வெளிநாட்டு இராணுவத் தளம் தற்போது ஆபிரிக்காவின்-ஜிபூட்டியில் மாத்திரமே இயங்கிவருகின்றது.
சீனாவின் மிக முக்கிய கடல்போக்குவரத்துகள் தென் சீனக் கடல், தாய்வான் கடற் பரப்பில் காணப்பட்டாலும்இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சீனாவின் நிலப்பரப்பிலும் மற்றும் உள்நாட்டு கடற்படை தளங்களிலுமே இடம்பெறுகின்றன.
இந்நிலையில்,சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ கடற்படை தளத்தை இலங்கையில் அமைக்கும் பட்சத்தில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் ஏற்பட்டால் கப்பல் வழிகளைப் பாதுகாக்கவும், உளவுத் தகவல்களை சேக்ரிக்கவும் சீனாவுக்கு இது உதவுவதாக அமையும்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் ஏற்கனவே தெற்காசியாவில் ஒரு போர் பதற்ற நிலையை உருவாகும் என்ற அபாய நிலையும் காணப்படுகிறது- என்றுள்ளது.