இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கைக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள்கையிருப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர், பேராசிரியர் உதயங்க ஹேமபால, இலங்கையின்எரிபொருள் துறையில் இயங்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களும் அடுத்தசில மாதங்களுக்குப் போதுமான விநியோக நிலைகளைஉறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதே காலகட்டத்திற்குப் போதுமான கையிருப்பை சிலோன் பெற்றோலியக்கூட்டுத்தாபனமும் கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலதிகமாக கொள்வனவு செய்யப்படும் எரிபொருள் கப்பல்கள் சரியானநேரத்தில் சிங்கப்பூர் வழியாக வந்து சேரும் என்றும் அமைச்சுஉறுதிப்படுத்தியுள்ளது.

Share this Article