இலங்கையின் அரிய வகை தாவரம் கடத்தல் முயற்சியில் சிக்கிய சீனப் பிரஜை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கைக்குச் சொந்தமான அரிய வகை மற்றும் பாதுகாக்கப்பட்ட ‘கொத்தல ஹிம்புட்டு’ தாவரத் துண்டுகளைச் சட்டவிரோதமாக சீனாவிற்கு கடத்த முயன்ற சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளிடம் சிக்கினார்

சுமார் 48.6 கிலோகிராம் எடையுள்ள கொத்தல ஹிம்புட்டு தாவரத் துண்டுகளை தேயிலை பாக்கெட்டுகளுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளார்

கைப்பற்றப்பட்ட தாவரத்தின் பெறுமதி சுமார் 3,00,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் சுங்கப் பிரிவினர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, அந்த சீனப் பிரஜைக்கு 2,00,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அவர் கொண்டு செல்ல முயன்ற அனைத்து தாவரத் துண்டுகளும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதுடன்ஙகொத்தல ஹிம்புட்டு என்பது இலங்கையின் பாரம்பரிய மருத்துவத்தில் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொக்கிஷமாகும்.

இது வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட தாவரம் என்பதால், இதனை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வது முற்றிலும் தடையாகும்.

Share this Article