இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முதல்ஜனாதிபதி ரணில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிரணில் விக்ரமசிங்க இன்று (ஓகஸ்ட் 23) அதிகாலை 12:22 மணியளவில்சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2023ல் தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் ஒன்றுக்கு மக்கள் பணத்தை பாவித்தார்என்ற வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று குற்றப்புலனாய்வுதிணைக்களத்திற்கு (CID) சென்றிருந்த போது முன்னாள் ஜனாதிபதி ரணில்கைது செய்யப்பட்டதுடன், நீண்ட நேர விசாரணையினெ பின்னர் கொழும்புமெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்குவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்ற அறையில் மின்சாரம்துண்டிக்கப்பட்டு, வழமைக்கு திரும்பியிருந்தது. மின்சாரம் தடைபட்டதால், வழக்கில் உத்தரவு வழங்குவது தாமதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது, அத்துடன் நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாமல் ராஜபக்‌ஷ, அலி சப்ரி, பிரசன்ன ரணதுங்க, சாமர சம்பத் உள்ளிட்ட பலஅரசியல் பிரமுகர்கள் குழுமி இருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலத்தபாதுகாப்புக்கு மத்தியில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துசெல்லப்பட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயர் இரத்தஅழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததாக கண்டறியப்பட்டு, வைத்திய ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் ரணில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், விசாரணையின் போது ரணில் அவர்களின் உடல்நிலை மற்றும்அவரது மனைவியின் புற்றுநோய் போன்ற காரணிகளை முன்வைத்து ரணிலின்தரப்பில் பிணை கோரப்பட்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Share this Article