இலங்கை போக்குவரத்து சபை வரலாற்றில் முதன்முறையாக பெண் பஸ் நடத்துனர்களை சேவையில் இணைக்கும் நிகழ்வு இன்று (06/02) நடைபெற்றது.
புதிதாக நியமிக்கப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்குமான நியமனக் கடிதங்கள், மாகும்புர பல்முக போக்குவரத்து மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
மேலும், நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்குமான புதிய உத்தியோகபூர்வ சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.