அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 20 சதவீதமாக குறைக்கும் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளை இலக்குவைத்து கடந்த சில மாதங்களாக புதிய வர்த்தக வரிகளை அமெரிக்கா அறிவித்து வந்துள்ளது. அவை இன்றைய தேதியிலிருந்து, அதாவது ஓகஸ்ட் 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகிறது. இந்நிலையில், சில நாடுகளுக்கான வர்த்தக வரிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஏற்கனவே 2025 ஏப்ரல் 2ஆம் திகதியில் 44 சதவீதமாக இருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி, தற்போது 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், குறிப்பாக இலங்கையின் ஆடைத் துறையை பாதிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.