அவுஸ்திரேலிய டொலர் 14 மில்லியன் பெறுமதியான இலங்கையின் இரண்டு திட்டங்களை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியர்கள் இருவரை அந்நாட்டு பெடரல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
67 மற்றும் 71 வயதுடைய இந்த இரு நபர்களும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்மெக் இன்டர்நேஷனல் என்ற அவுஸ்திரேலியா நிறுவனத்தில் கடமையாற்றியுள்ளனர்.
இலங்கை மற்றும் பங்களாதேஷில் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முறையற்ற கொடுப்பனவு தொடர்பாக இந்த நிறுவனத்துக்கு எதிராக சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.