இராமேஸ்வரத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் வர முயன்றமுல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமிழக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருடன் 02 முகவர்களையும் பொலிஸார்கைதுசெய்துள்ளனர்.
இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் பொலிஸார்ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமாக நின்ற பெண்ணிடம் விசாரணைசெய்த போது, பெண் இலங்கைத் தமிழில் பேசியுள்ளார்.
இதையடுத்து, அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைநடத்தியதில், அவர் முல்லைத்தீவு பாண்டியன்குளத்தைச் சேர்ந்த 45 வயது பெண்என்றும் கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக06 மாத விசா பெற்று சென்னைசென்றதும் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் 24 நாள்கள் தங்கிய இப்பெண், சென்னை வளசரவாக்கம்பகுதியில் உள்ள இலங்கையர் ஒருவரின் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாகடெய்லராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜூன் 30ஆம் திகதி மதுரைக்குவந்து, உறவினர் உதவியுடன் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நபர்களை தொடர்புகொண்டு இலங்கைக்கு படகில் அழைத்துச் செல்வதற்கு 50,000 ரூபாதருவதாகக் கூறியுள்ளார்.
இதன்படி, இலங்கைக்கு படகில் செல்வதற்காக இராமேஸ்வரத்துக்கு வந்ததுவிசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து பெண்ணையும் முகவர்களாக செயல்பட்டஇருவரைக் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றுமொரு நபரைபொலிஸார் தேடி வருகின்றனர்