இன்று முதல் வடமாகாண ஆளுநரிடம் நேரடியாக முறையிடலாம் -ஆளுநர்செயலகம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் பொது மக்கள் குறைகேள் வலையமைப்பான“அபயம்” பிரிவின் செயற்பாடுகள் நேற்று திங்கட்கிழமை (செப். 30) முதல்நிறுத்துப்பட்டுள்ளது.

இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (ஒக். 01) முதல் பொது மக்கள் தங்கள்குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது 021 221 9375 மற்றும் 021 221 9376 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறையிடலாம் என ஆளுநர்செயலகம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் “அபயம்” எனும் பிரிவினருக்கு மக்கள் தங்கள் குறைகளைகூறி, அவர்களே அதனை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்நடைமுறை இருந்தது.

தற்போது புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள நா.வேதநாயகன், அபயம் பிரிவினைநிறுத்தி மக்கள் நேரடியாக தன்னிடம் முறையிட கூடியவாறான பொறிமுறையை உருவாக்கியுள்ளார்.

அதனால் ஊழல் மோசடிகள் துஷ்பிரயோகங்கள், நிர்வாக ரீதியான பிரச்சனைகள்என்பவற்றை ஆளுநரிடம் நேரடியாக முறையிட முடியும்.

Share this Article