இந்திய மீனவர்களின் அத்துமீறல் – யாழ் அரசாங்க அதிபரிடம் மகஜர்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்திய மீனவர்களின்  அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி இன்றைய தினம் (12.12)   யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து  பேரணியாக ஆரம்பமாகி யாழ் மாவட்ட செயலகம் வரை சென்றடைந்துடன், சனாதிபதி அவர்களுக்கான மகஜர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்..

மீனவர்களின் நியாயபூர்வமான கோரிக்கையினை சனாதிபதி அவர்களின் கவனத்திற்கும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

Share this Article