இலங்கைக்காகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்று(20/04) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளித்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் விவரங்கள்
பப்புவா நியூ கினியா: உயர்ஸ்தானிகர் வின்சென்ட் சுமேல் (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).
சோமாலியா: தூதுவர் அப்துல்லாஹி முகமது ஒடோவா (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).
லக்சம்பர்க்: தூதுவர் கிறிஸ்டியன் பீவர் (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).
வத்திக்கான்: அப்போஸ்தலிக்க தூதுவர் மொன்சிஞ்ஞோர் ஆண்ட்ரே ஜோஸ்வோவிக்.
பாகிஸ்தான்: உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யார் நசீர்.
குவைத்: தூதுவர் சலே முபாரக் அல்-சரவி.
நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்ததைத் தொடர்ந்து, புதிய இராஜதந்திரிகளுடன் ஜனாதிபதி சுமுகமான முறையில் கலந்துரையாடினார்.