அரசாங்கத்தின் சில செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ´´நாட்டுக்கு வேண்டும் என்றே புற்றுநோயை உண்டாக்க கூடிய எண்ணெய்யை இறக்குமதி செய்யப்படுகின்றது என்றாள், அது தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாக நான் கருதுகின்றேன். ஆகவே இன்று தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த அரசாங்கமே மக்களின் பாதுகாப்பை துச்சமாக மதித்து செயற்படும் அரசாங்கம். மக்களை அழிப்பதல்ல அரசாங்கத்தின் பொறுப்பு, மாறாக அவர்களை வாழ வைப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என கூற வேண்டும்.
தரமற்ற எண்ணையை நாட்டுக்கு கொண்டு வந்த அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரபட்டு சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் ஜனநாயக ரீதியில் போராட தயார்´´ என்றும் தெரிவித்தார்