அரச நிகழ்வில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த ஜனாதிபதி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அரச நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கீர் மயர்டிட் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்தமை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வீடியோவை வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டில் 6 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 3ஆம் திகதி 6 ஊடகவியலாளர்கள் அந்த நாட்டு இரகசிய உளவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு ஆபிரிக்க நாடான தெற்கு சூடானின் ஜனாதிபதி சல்வா கீர் மயர்டிட். 71 வயதாகும் இவர் அரச நிகழ்வொன்றில் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஆடையிலேயே சிறுநீர் கழிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோக் காட்சியை வெளியிட்டனர் என்று தெரிவித்தே ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு வலியுறுத்தியுள்ளது.

Share this Article