அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய புதிய குழு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துபரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவைதீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (27) இடம்பெற்றஅமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறுகோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி தீர்வுகளைவழங்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு துறையிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்துஅதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு குழுவொன்றை நியமிக்க வேண்டும் எனஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளதுடன், பிரேரணைக்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய குறித்த குழுவைவிரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்குஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article